HomeFeatured Newsதென்னிந்தியாவின் குயில் எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் குயில் எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்திய இசை உலகின் இணையற்ற பின்னணிப் பாடகிகளில் ஒருவராக போற்றப்படும் பாடகி எஸ். ஜானகி, இன்று (ஜூலை 11) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் காலமானார்.

 அவருக்கு வயது 88. கடந்த சில நாட்களாக வயது சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தனித்துவமான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடும் பாணி மற்றும் பல்வேறு இசை வடிவங்களில் திறமையாகப் பாடியதன் மூலம் இந்திய இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

எஸ். ஜானகி தனது இசைச் சேவைக்காக நான்கு தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும், பல மாநில அரசுகளின் உயரிய கலை விருதுகளையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக தமிழ்த் திரையிசையில் இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை வழங்கியவர்.

அவரது மறைவுச் செய்தி இந்திய திரையுலகிலும் இசை உலகிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்படப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய இசை வரலாற்றில் எஸ். ஜானகியின் குரல் என்றும் நிலைத்திருக்கும் என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular