HomeFeatured Newsஇலங்கையில் இயங்கிய 24 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்

இலங்கையில் இயங்கிய 24 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்

இலங்கையில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கி வந்த 24 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கான அணுகலை அரசு உடனடியாக முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த அனைத்து இணையதளங்களையும் உடனடியாகத் தடை செய்யுமாறு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையின் கோரிக்கைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் பெறப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் ஆன்லைன் சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது விளம்பரப்படுத்துவது, சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட 24 இணையதளங்கள்:

1xbet.com

betway.com/en-lk

22bet.com

melbet.com

unibet.com

betfair.com

dafabet.com

bet365.com

1win.com

spinbetter.com

10cric.com

bc.game

megapari.com

pin-up.bet

stake.com

mostbet.com

parimatch.com

betwinner.com

linebet.com

4rabet.com

rajabets.com

dbbet.com

coldbet.com

WinWin

இலங்கையின் சட்டக் சட்டமைப்பிற்குப் புறம்பாக அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இத்தகைய ஆன்லைன் சூதாட்டத் தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் TRCSL ஆகியவை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் தொடர்பான புதிய சட்ட நடவடிக்கைகள் பற்றிய இந்த காணொளியைப் பார்க்கலாம். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் தளங்கள் மீதான சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் குறித்து விரிவாகப் புரிந்துகொள்ள இக்காணொளி பயனுள்ளதாக இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular