ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், டிரம்ப் இந்த அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் வீண் வேலை. அவர்கள் மோசமான, ஆபத்தான மனிதர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், அந்த நாட்டை “அழுக்கு ஆட்டக்காரர்கள்” (dirty players) என குற்றம்சாட்டினார்.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தங்களது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்திருந்தது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன் மூலம் முற்றிலும் முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
“ஈரானின் இந்த புற்றுநோயை நாம் வேரோடு அழிக்க வேண்டும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெட்டி எறிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களே, அதேபோல் தான் நானும் உணர்கிறேன்.” என டொனால்ட் டிரம்ப் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டுப் பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்ந்து பேச விரும்பினால் பேசட்டும், ஆனால் ஈரானுடன் தூதரக ரீதியாகப் பேசுவதில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா தனது “அடுத்த கட்ட வேலையை” கவனிக்க வேண்டிய நேரம் இது என்றும் டிரம்ப் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
