HomeFeatured Newsஇலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை வருமானம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை வருமானம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 1,373.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு சமர்த்தாகியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான இலக்கை விட இது பொதுவான அளவில் அதிகரித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

முதல் 6 மாதங்களுக்கு சுங்கத் திணைக்களம் எதிர்பார்த்த வருமான இலக்கு 1,060.5 பில்லியன் ரூபாயாகும். எனினும், சுங்கத் திணைக்களம் அந்த இலக்கையும் தாண்டி 313 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்த வருடத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபாயாகும். தற்போதைய நிலவரத்தின்படி, கடந்த வருடம் ஈட்டப்பட்ட சாதனை வருமானமான 2.5 ட்ரில்லியன் ரூபாயையும் இந்த வருடம் தாண்டிச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாதத்திற்காக சுங்கத் திணைக்களத்திற்கு 192.4 பில்லியன் ரூபாய் வருமான இலக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 31 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட சுங்கத் திணைக்களம் வெற்றிகண்டுள்ளது.

எவ்வாறாயினும், மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக, அந்தத் துறையின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் ஓரளவு வீழ்ச்சி பதிவானதாக சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular