HomeFeatured Newsஜெனீவா வந்தடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்

ஜெனீவா வந்தடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அங்கு அவரை சுவிஸ் அதிபர் கை பார்மலின் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான அமெரிக்க தூதர் காலிஸ்டா கிங்ரிச் ஆகியோர் நேரில் சந்தித்து வரவேற்றனர்.

விமான நிலையத்தின் ஓடுதளத்தில் (Tarmac) சில நிமிடங்களே செலவழித்த அதிபர் ட்ரம்ப், உடனடியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் ஏறினார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் ட்ரம்ப் பயணித்த அந்த ஹெலிகாப்டர், பிற இராணுவ விமானங்களின் பாதுகாப்புடன் பிரான்சின்ஏவியன்லெபெய்ன்ஸ்நகரை நோக்கிச் சற்று நேரத்திலேயே புறப்பட்டுச் சென்றது.

ஜெனீவா ஏரிக்கு அருகில் அமைந்துள்ள இந்த பிரெஞ்சு நகரில்தான் உலகப் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 (G7) உச்சிமாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு வருகை தரும் தூதுக்குழுவினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஜெனீவா விமான நிலைய ஓடுதளப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அசாதாரணமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular