HomeFeatured Newsநீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இருவர் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இருவர் பலி

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதலைத் தொடர்ந்து, காயமடைந்த சுமார் 25 கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கான காரணம் அல்லது அவர்களின் காயங்களின் தீவிரம் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular