சுவிட்சர்லாந்தின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளே நாட்டின் பிரதான தூண்களாக விளங்குகின்றன என்றும், வேகமாக மாறிவரும் உலகிற்கு காலத்தைக் கடந்து நிற்கும் உயரிய விழுமியங்கள் தேவை என்றும் சுவிஸ் அதிபர் கை பார்மெலின் தெரிவித்துள்ளார்.
மத்திய சுவிட்சர்லாந்தின் உரி கான்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரூட்லி புல்வெளியில் நடைபெற்ற சுவிஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆடைகள் நாம் யார், எங்கிருந்து வருகிறோம், நமது அடையாளம் என்ன என்பதை வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து பல்வேறு ஆடை முறைகளுக்கு மட்டுமல்லாது, பல தேசிய மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கும் தாயகமாகத் திகழ்கிறது. இந்த பன்முகத்தன்மை நம்மை ஒருபோதும் பிரிப்பதில்லை என கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஒருபோதும் அதன் நிலப்பரப்பால் பெரிதாகக் கருதப்பட்டதில்லை, மாறாகத் தனது சொந்த விதியைத் தானே நிர்ணயிக்கும் உறுதியான மனப்பான்மையாலேயே பெருமையடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ரூட்லி புல்வெளி என்பது எந்தவொரு அரண்மனையோ அல்லது கோட்டையோ அல்ல; அது ஒரு எளிய புல்வெளி. சுவிட்சர்லாந்து என்பது தனிநபரரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ மட்டும் சார்ந்திருக்காமல், தினமும் பொறுப்பேற்கும் கோடிக்கணக்கான மக்களையே மையமாகக் கொண்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
வெவ்வேறு பின்னணியைக் கொண்ட மக்கள் தனித்துச் செயல்படுவதை விட ஒன்றிணையும் போது வலிமையானவர்களாக மாறுகிறார்கள் என சுவிஸ் அதிபர் சுட்டிக்காட்டினார்.
சுவிட்சர்லாந்து என்பது வெறும் முன்னோர்களின் பரம்பரைச் சொத்து மட்டுமல்ல, அது ஒவ்வொரு தலைமுறையும் புதிதாகக் கையிலெடுக்க வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பாகும். மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்தாலும் சரி, சூட் அல்லது அரைக்கால் சட்டை அணிந்திருந்தாலும் சரி என கை பார்மெலின் தனது உரையை நிறைவு செய்தார்.
