HomeFeatured Newsகுவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்

குவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, குவைத்துக்கான தமது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளைகுடா நாடான குவைத்துக்கான விமான சேவைகள் ஜூலை 20 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களைப் பெற விரும்பும் பயணிகள் பின்வரும் வழிகளில் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

  • உடனடி அழைப்பு எண் (Hotline): 1979
  • வாட்ஸ்அப் (WhatsApp) எண்கள்: +94 11 777 1979 அல்லது +94 74 444 1979

மேலும் புதிய தகவல்களை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular