ஈரானுடனான போரில் ஜூலை 7 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் 100 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் சுமார் 100 இராணுவ வீரர்கள் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனினும், அவர்களில் 96 சதவீதம் பேர் சிகிச்சைக்குப் பின் மீண்டும் தங்களது கடமைக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் களத்தில் தொடர்ந்து போராட உறுதியுடன் உள்ளனர்
காயமடைந்த பெரும்பாலான வீரர்களுக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையைப் பென்டகன் மறைப்பதாக ‘நியூயார்க் டைம்ஸ்‘ (நாளிதழ் வெளியிட்ட செய்திக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஷான் பார்னெல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, வீரர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக அமெரிக்க இராணுவத் தரப்பு தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
