HomeFeatured Newsஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படுகிறது

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படுகிறது

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கொமெய்னியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என ஈரானிய செய்தி நிறுவனமொன்கு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளின் போது விமான சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

எனினும், சிவில் விமான போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ள கால அட்டவணையின்படி, தலைநகரில் திங்கட்கிழமை பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வழக்கமான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

செவ்வாய்க்கிழமை முதல் மெஹ்ராபாத் விமான நிலையம் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும், ஆனால் இமாம் கொமேனி விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

 இறுதி அடக்க சடங்கின் போது, ஜூலை 9 அன்று வடகிழக்கு நகரமான மஷாத்தின் வான்வெளியும், அங்குள்ள ஷாஹித் ஹாஷெமினெஜாத் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கின் கடைசி நாளில் மஷாத் நகரத்திற்கான விமானங்களைத் தவிர, ஜூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நாட்டின் பிற பகுதிகளுக்கான விமான சேவைகள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular