முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சீ.டி. விக்ரமரட்னின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், இது தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா பொலிஸ் சேவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய விக்ரமரத்ன, நாட்டின் 35வது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் சீ.டி. விக்ரமரட்ன பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
