முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளுது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமையை மீறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காவல்துறை மா அதிபர் ஓருவருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டமை முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
