சுவிட்சர்லாந்தின் ‘நியூசேட்டல்‘ மாகாணத்திலுள்ள ‘கொலம்பியர்‘ விமான நிலையத்தில் சனிக்கிழமை ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
‘பிபிஸ்ட்ரெல் வைரஸ்‘ வகையைச் சேர்ந்த இந்த சிறிய ரக விமானத்தில் 69 வயதான சுவிட்சர்லாந்து நாட்டவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார். தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையின் ஓரத்தில் கவிழ்ந்து நின்றது.
இந்த விபத்தில் தலையில் காயமடைந்த விமானி, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு ‘லிட்டோரல்‘ பகுதி தீயணைப்புப் படையினர், வெடிபொருள் அகற்றும் குழுவினர், சுவிஸ் பாதுகாப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் மற்றும் 5 பொலிஸ் ரோந்துப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
