HomeFeatured Newsசுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கி 100 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கி 100 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் வலேயிஸ் கான்டனில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை இரவு, பின்டால் (Binntal) பள்ளத்தாக்கில் உள்ள எக்கர்ஹோர்ன் ஆல்ப் பகுதியில் ஏற்பட்ட கடும் இடியுடன் கூடிய மழையின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்குதலின்போது சுமார் 80 செம்மறி ஆடுகள் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட செம்மறி ஆடு வளர்ப்பாளர் ஒருவர், வலாயிஸ் பகுதியைச் சேர்ந்த இணைய ஊடகமொன்றுக்கு இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை முழுவதும் மின்னல் தாக்கிய இடத்திலிருந்து உயிரிழந்த ஆடுகளின் உடல்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

செம்மறி ஆடு வளர்ப்பாளர் கிலியன் ஷ்னைட்ரிக் (Kilian Schnydrig) தெரிவிக்கையில், பெரிய வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து ஆடுகளும் ஒரே இடத்தில் இரவு நேரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆடுகளை இவ்வாறு இரவு நேரங்களில் ஒன்றாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்றபோது, அந்த ஆடுகள் இரவு நேர பாதுகாப்பு வேலிக்குள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் அரிய இனமாகக் கருதப்படும் கருப்பு மூக்கு செம்மறி ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular