HomeFeatured Newsகிடுக்கு பிடிக்குள் ராஜபக்சக்கள்: பூதாகாரமாகும் சுரேஷ் சலே விவகாரம்!

கிடுக்கு பிடிக்குள் ராஜபக்சக்கள்: பூதாகாரமாகும் சுரேஷ் சலே விவகாரம்!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள், நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

இத்தாக்குதலின் பின்னணியில்அரசியல் சூழ்ச்சிஇருப்பதாகத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரை பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் சலே திட்டமிட்டு நடத்தினார்: அமைச்சர் ஆனந்த விஜயபால அதிரடி

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குறித்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று நாடாளுமன்றத்தில் நீண்ட விளக்கமளித்தார்.

அரசியல் சூழ்ச்சித் திட்டம்: ஈஸ்டர் குண்டுத் தாக்குதலானது வெறும் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; அது நாட்டில் ஒரு செயற்கையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் லாபம் அடைவதற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியாகும் என தெரிவித்துள்ளார்.

தேவாலயங்களில் உளவு வேலை: தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே, சுரேஷ் சலேயின் உத்தரவின் பேரில் நான்கு முஸ்லிம் நபர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள தேவாலயங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டியுள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தாக்குதலுக்கு உதவி: இத்தாக்குதலை ஒருங்கிணைப்பதற்கும், தற்கொலை குண்டுதாரிகளுக்குத் தேவையான வசதிகளையும், நிதியுதவிகளையும் செய்து கொடுத்ததில் சுரேஷ் சலேவுக்கு நேரடித் தொடர்பு உண்டு என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மறைந்திருக்கும் அரசியல் மறைகரம்: சுரேஷ் சலே இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் நாட்டின் ஜனாதிபதியாக வரத் திட்டமிடவில்லை; மாறாக, அவருக்குப் பின்னால் இருந்து இயக்கிய ஒரு பலமிக்க அரசியல் மறைகரத்தின் தேவைக்காகவே இந்தச் சூழ்ச்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு; உண்ணாவிரதப் போராட்டம்

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே தற்பொழுது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவர் விசாரணைகளுக்குச் சரிவர ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர் தனது மடிக்கணினி (Laptop) மற்றும் அலைபேசி (Mobile Phone) ஆகியவற்றின் கடவுச்சொற்களை (Password) வழங்க மறுத்து வருவதாகப் புலனாய்வுத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் தனக்கு முறையற்ற சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி, சுரேஷ் சலே அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, தற்பொழுது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபக்சாக்களுக்கு நெருக்கடி: கோட்டாபயவுக்கு பயணத் தடை

சுரேஷ் சலேயிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடுத்தகட்ட நகர்வாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சில முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அண்மையில் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளது.

சுரேஷ் சலேயின் முழுமையான வாக்குமூலங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் வெளிவரும் போது, இத்தாக்குதலின் மூலம் அரசியல் நன்மையடைந்த ராஜபக்ச குடும்பத்தினர் சட்டத்தின் பிடியில் சிக்குவது உறுதி எனப் பரவலான யூகங்கள் வெளிவந்துள்ளன.

சிங்கள தேசியவாத கோஷத்தைக் கையில் எடுக்கும் ராஜபக்ச தரப்பு

இந்த அதிரடி விசாரணைகளால் நிலைகுலைந்துள்ள ராஜபக்சக்கள் மற்றும் அவர்களின் ஆதரவுத் தரப்பினர், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீண்டும் பழைய அரசியல் உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது அவர்கள்சிங்கள தேசியவாதம்என்ற போர்வையையும், “யுத்தத்தை வென்ற ராணுவ மாவீரர்களைப் பாதுகாப்போம்என்ற கோஷத்தையும் எழுப்பி, மக்கள் மத்தியில் அனுதாபத்தைத் திரட்ட தீவிரமாக முயன்று வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், இந்த வழக்குக் குறித்த விசாரணைகள் தற்பொழுது மிகச் சரியான திசையில் நகர்வதாகவும், எத்தகைய அரசியல் அல்லது ராணுவ சக்திகளினாலும் இந்த விசாரணைகளை இனிமேல் தடுத்து நிறுத்த முடியாது எனவும், ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளுக்கு மிக விரைவில் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular