HomeFeatured Newsமஹர சிறை வன்முறைகளின் பின்னணியில் சதி முயற்சியா! அரசாங்கம்

மஹர சிறை வன்முறைகளின் பின்னணியில் சதி முயற்சியா! அரசாங்கம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்செயலானது அல்ல எனவும், இதன் பின்னணியில் வெளியிலிருந்தவாறு சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்படும் சதி முயற்சிகள் இருக்கலாம் எனத் தான் சந்தேகப்பவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலானது கைதிகளுக்கு இடையே மட்டுமே ஏற்பட்ட ஒன்றாகும். ஆனால், மஹர சிறைச்சாலையில் வெடித்த கலவரமானது கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விரு சம்பவங்களின் தன்மைகளும் முற்றிலும் மாறுபட்டவை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீண்டகாலமாக எவ்வித வெளிப்படையான காரணங்களும் இன்றி சிறைச்சாலைகளில் இதுபோன்று திடீர் வன்முறைகள் வெடித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வெளியிலிருந்தவாறு சில குழுக்கள் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலை அமைதியின்மையை உருவாக்கி வருகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும், இதன்பின்னணியில் வெளிப்புறத் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளால் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறை வன்முறையின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular