HomeFeatured Newsஹோமாகம ஹெல்மட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஐவர் பலி

ஹோமாகம ஹெல்மட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஐவர் பலி

ஹோமாகம, கட்டுவன தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மட் (தலைக்கவசம்) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுவன தொழில் மண்டலத்திற்குள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரென பரவிய தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன காரணத்திற்காக இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular