HomeTop Newsமுன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், சரண குணவர்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டு சரண குணவர்தன அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலகட்டத்தில் இந்த ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த நிறுவனத்திற்காக வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்றதன் மூலம், அவர் அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார் எனவும், அதன் மூலம் ஊழல் குற்றத்தைப் புரிந்துள்ளார் எனவும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் மற்றும் சிறைத்தண்டனை காலத்தை நிர்ணயிப்பது குறித்து தற்போது நீதிமன்றத்தில் இருதரப்பு சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, அவருக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular