HomeFeatured Newsகைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி கோட்டாபய நீதிமன்றில் மனுத்தாக்கல்

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி கோட்டாபய நீதிமன்றில் மனுத்தாக்கல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பின்வருவோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்:

பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பல அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு, ஜனாதிபதி சார்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular