HomeFeatured Newsஅமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது.

பல்கேரியாவின் பெஸ்மர் விமானப் படையில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிலைநிறுத்தப்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு அந்நாட்டை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, பல்கேரிய வெளியுறவு அமைச்சர் வெலிஸ்லவா பெட்ரோவாசமோவாவுடன் வியாழக்கிழமை நடத்திய தொலைபேசி உரையாடலின் போது இது குறித்துப் பேசினார்.

அமெரிக்க ராணுவ விமானங்களை நிலைநிறுத்த சோஃப்பியா அனுமதி அளித்தது ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் செயலாகும் எனவும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவுக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானின் எதிர்ப்பையும் மீறி, பெஸ்மர் விமானப் படையில் 8 வரையிலான அமெரிக்க விமானங்களையும், 250 வரையிலான ராணுவ வீரர்களையும் தற்காலிகமாக நிலைநிறுத்த பல்கேரிய நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

எனினும், தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படாது எனவும், இந்த நடவடிக்கை பல்கேரியாவை ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பங்காளியாக மாற்றாது எனவும் சோஃப்பியா தெரிவித்துள்ளது.

இதேபோன்று, சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் கொன்ஸ்டான்டினோஸ் கொம்போஸுடனும் அப்பாஸ் அராச்சி தனியாகத் தொலைபேசியில் உரையாடினார். அப்போது சைப்ரஸில் உள்ள வெளிநாட்டு ராணுவத் தளங்கள் ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்களைத் தொடங்கிய சில நாட்களில், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இந்த விமானத் தளம் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular