HomeFeatured News அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

 அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சியாட்டில் சென்டரில் நடைபெற்ற ‘பைட் ஆஃப் சியாட்டில்’ உணவுத் திருவிழாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு பேர் பரஸ்பரம் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டதாகக் நம்பப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்ற 4 பேரின் நிலைமை தற்போது சீராக உள்ளது. மக்களுக்குத் தற்போது எந்தவிதப் அச்சுறுத்தலும் இல்லை  என ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular