HomeFeatured Newsடொலலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு சற்று வீழ்ச்சி!

டொலலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு சற்று வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அந்நியச் செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 331.62 ஆக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை, இன்று சிறிய அளவில் உயர்ந்து ரூ. 331.66 ஆகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், வெள்ளிக்கிழமை ரூ. 340.79 ஆக இருந்த விற்பனை விலை இன்று ரூ. 340.83 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, உலகின் முக்கிய சர்வதேச நாணயங்களின் கூடைக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று சரிவைக் கண்டுள்ளது.

எனினும், பல வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் சிறிய அளவிலான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular